கல்லா கெட்டும் கட்டுக்கதை

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12032
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கல்லா கெட்டும் கட்டுக்கதை

Post by ஆதித்தன் » Fri Jan 06, 2017 10:12 am

பரபரப்பான செய்திகளை வழங்க வேண்டும் என்று பத்திரிக்கைகள் எவ்வளவு மெனக்கெட்டு தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறதோ, அதற்கு இருமடங்கு உயர்வான பரபரப்பினை உருவாக்க வேண்டும் என்று இணையதள யுடியூப் சேனல்கள் செயல்படுகின்றன. இதன் விளைவாக,

மூன்றாம் உலகப்போர் வரப்போகிறது என்கிறார்கள்,

ஏலியன்ஸ் பூமியை அழிப்பதற்காக பவுர்புல் அட்டாக் செய்யப் போகிறார்கள் என்கிறார்கள்,

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிறார்கள்,

ஜெயலலிதா சாகவே இல்லை என்கிறார்கள்,

சசிகலாவை ஆவி அடிக்கப்போகுது என்கிறார்கள்,

பன்னீர் பாவாடை கட்டுகிறார் என்கிறார்கள்,

பிரதமர் மோடி தலைக்கு குறி என்கிறார்கள்,

தமிழகத்தின் உளவுத்துறை இராணி தமிழச்சி என்கிறார்கள்,

இப்படி தினமும் புதுசு புதுசா அன்றைய தினத்தின் ட்ரெண்டிற்கு ஏற்ப பரபரப்பான கட்டுக்கதைகள் வந்து கொண்டிருக்கின்றன.

இத்தகைய செய்திகளை கட்டுக்கதை என்றுக்கூட சொல்ல முடியாது, புரளி என்றுச் சொல்லலாம். ஏனெனில் எதற்கும் சரியான ஆதாரம் கிடையாது, கொடுத்தாலும் அது ஓர் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாத நிலையாகத்தான் நீதிமன்றத்தினைப் பொறுத்த வரைக்கும் இருக்கும்.

உதாரணத்திற்கு, சமீபத்தில் இறந்த ஜெயலலிதா அவர்கள் உடலில் இருக்கும் காயம், மாறா கண் இமை, சந்தேகப்படுத்தும் உடல் நீளம் என பலவற்றைக் காட்டி, ரமணா ஸ்டைலில் செத்த பிணத்திற்கு ரெட்டி வைத்தியம் பார்த்து மக்கள் வரிப்பணத்தினை கோடிக்கணக்கில் வசூலித்துவிட்டார் என்றும், மருத்துவமனையில் வைத்து நாடகம் ஆடிவிட்டனர் என பல குற்றச்சாட்டுகளைக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது, அல்லது நிலுவையில் இருப்பதும் தள்ளுபடி செய்யப்படலாம் என்பதே மக்கள் கருத்தாக ஒலிக்கிறது.

இப்படி இருக்கையில் தற்போதைய பரபரப்பு இணையதளத் தகவல்களைப் பார்க்கையில் உங்களுக்கு என்னத் தோன்றுகிறது?

உண்மையில் இவர்கள் சரியான தகவலைத்தான் மக்களுக்கு சொல்லுகிறார்களா? அல்லது மிடியாக்கள் ரேட்டிங்கிற்காக புதுசு புதுசா ப்ரோக்கிராம் பண்ணி மக்களை தன் வயப்படுத்தி வைப்பதுபோல, இவர்களும் புதுசா ஏதாவது சொல்லணும் என்றுச் சொல்லி மக்களை கவர்றாங்களா? தெரியவில்லை, ஆனால் பணம் என்ற மோகத்தில் பரப்பப்படும் தகவல்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

பேப்பர் செய்தி ஒர் வியாபாரம் என்றுச் சொன்னால், ஆன்லைன் தகவல் பரிமாற்றமும் ஒர் வியாபார யுக்திதான் என்பதனை உணர்ந்து, ஆய்வுக்குப் பின் இரண்டையும் ஏற்பது நல்லது.
Post Reply

Return to “படுகை ஓரம்”