Page 1 of 1

கருப்பு எல்லாம் வெளுத்திடுச்சி

Posted: Thu Dec 29, 2016 11:28 am
by ஆதித்தன்
கருப்பு பணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையாக 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து, அதனை வங்கியில் டெபாசிட் செய்ய அரசு சொன்னது. அதன்படி கிட்டத்தட்ட 14.5 இலட்சம் கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட செல்லா ரூபாய் நோட்டுகளில் 14 இலட்சம் கோடி டெபாசிட்டாக வந்துவிட்டதாக நாளிதழ் பெட்டிச் செய்தி நேற்றி வெளிவந்தது. இன்னும் 2 நாட்கள் மீதம் இருப்பதால், மீதம் இருக்கும் தொகையை வந்துவிடும் போலிருக்கிறது.

தடை செய்யப்பட்ட நேரத்தில் வங்கிக் கையிருப்புப் தொகையையும் கணக்கீடு செய்தால் எல்லாத் தொகையும் வந்து வெளுத்திடுச்சோ என்று தோன்றுகிறது.

வரும் ஜனவரியிலும் வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான தளர்வு நீக்கப்படமாட்டாது போல் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், மக்களை திசை திருப்பும் நிகழ்வுகளைச் செய்து அடுத்து ஏதேனும் செய்வார்கள். அதிலும் குஜராத்தில் பிடிபட்ட வைர நகை வியாபாரி வரி கட்டிட்டாரா? மேக் இன் இண்டியா ஸ்டார் என்ன ஆனார்? என்ற கட்டச் செய்தி இனி காண கிடைப்பது அரிதுதான்.

கருப்பு எல்லாம் வந்து வெளுத்திட்டாலும், நாட்டு மக்கள் வாழ்வு மட்டும் மேலும் கருமையாக மாறிவிட்டது. பொதுவாழ்வு வழக்கமான நடைமுறைக்கு வர மேலும் 6 மாதம் ஆகும் போலிருக்கிறது.