அரைகுறை ஆதார் - அத்தாட்சி இல்லா பரிமாற்றம்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11811
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அரைகுறை ஆதார் - அத்தாட்சி இல்லா பரிமாற்றம்

Post by ஆதித்தன் » Mon Dec 26, 2016 1:55 pm

அரைவேக்காட்டுத்தனமான திட்டங்களை அறிவிப்பது என்பதனால் பாதிக்கப்படும் மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசு, தானே விரும்பிச் செய்து கொண்டிருக்கும் ஆதார் செயல் மையத்தில் இருக்கும் குறையினை தீர்க்குமா? அல்லது அதனை சாதகமாகப் பயன்படுத்தி மக்களைத் துன்பப்படுத்தும் திட்டமா? எதுவுமே புரியவில்லை.

ஆதார் என்பது ஒர் தனித்துவமான ஒவ்வொருவருக்குமான அடையாளச் சான்று ஆகும். இதில் நமது கருவிழி & கைரேகை என இரண்டையும் பதிந்து முகவரி விவரங்களையும் இணைத்துள்ளனர்.

தற்பொழுது ஒவ்வொரு நபர்க்கான அரசு திட்டம், பிற தனியார் துறை திட்டம், வங்கித்திட்டம் என பலவற்றிலும் ஆதார் பயன்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய நாளில் 109 கோடிக்கும் மேற்பட்ட தகவல் பரிமாற்றங்கள் ஆதார் செயல் மையத்தில் நடைபெற்றுள்ளது.

ஆனால், இந்த தகவலுக்காக உங்களது ஆதார் சரிபார்க்கப்பட்டது என்ற அத்தாட்சி நம்மிடம் இல்லை என்பதுதான் பெரிய குறை. நமக்கான தனித்துவ ஆதார் எண் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆதார் கார்டு கணக்கு எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்ட கூடுதல் தகவலை தராமல் மறைப்பது ஏன்?

அதாவது, ஆதார் எண் மையப்படுத்தி கேஸ் மாணியம் கொடுத்தீர்கள் என்றுச் சொன்னால், எனது ஆதார் கணக்கில் அந்த குறிப்பினை அத்தாட்சியாக கொடுக்காதது ஏன்?

எனது ஆதார் தனியார் மொபைல் சிம் வாங்க சரிபார்க்கப்பட்டது என்றுச் சொன்னால், இந்த ஏஜண்ட் உங்களது ஆதார் கார்டு விவரத்தினை சரி பார்த்தார் என்ற தகவலை தர மறுப்பது ஏன்?

வங்கிப் பணப் பரிமாற்றத்திற்கு ஆதார் உபயோகப்படுத்த இருக்கிறீர்கள் என்கிற பொழுது, இவ்வளவு பணம் இந்த ஏஜண்ட் மூலம் ஆதார் சரிபார்க்கப்பட்டு அனுப்பப்பட்டது என்ற தகவலை கொடுக்க தயங்குவது ஏன்?

இப்படி பல விடயங்களுக்கும் ஆதார் ஆதாரமாக நாம் கொடுத்த கைரேகையை பயன்படுத்தும் அரசு, அவற்றை இதற்காக இந்த நாளில், இந்த நேரத்தில் இந்த ஏஜண்ட் வழியாக பயன்படுத்தப்பட்டது என்ற அத்தாட்சி ஆதாரத்தினை கொடுக்காமல் ஏமாற்றுவது என்பது மிகப் பெரிய ஏமாற்று வேலை.

ஊழல் பெருச்சாளிகள் மிகுந்த அலுவலல் மட்டத்தில், இவ்வாறான அத்தாட்சி அற்ற பயன்பாடு மிகப்பெரிய தீங்கினை விளைவிக்கும் என்பதால் பொதுமக்கள் இப்பொழுதே விழிப்புடன் தங்களது ஆதார் எதற்காக பயன்படுத்தப்பட்ட அத்தாட்சியினை உடனுக்கூடனும் மாதம் ஒர்முறை அறிக்கையாகவும் வழங்க வேண்டும் என்று கட்டாயம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

வங்கி ஸ்டேட்மெண்ட் எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆதார் செயல்பாட்டு ஸ்டேட்மெண்ட், ஆகையால் மக்கள் உடனே சிந்தித்து செயல்படுங்கள். அரைகுறை ஆதாரால் ஏற்படப்போகும் ஆபத்திலும் ஏமாற்றிலும் இருந்து காத்துக் கொள்ளுங்கள்.

நன்றி.
Post Reply

Return to “படுகை ஓரம்”