Page 1 of 1

ஆதார் செயலி மையம் - வங்கிக்கு பணம் வாங்கவும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது

Posted: Sun Dec 25, 2016 10:17 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=MZnzQHb4Tvw[/youtube]

ஆதார் கார்டு மையப்படுத்தி புதிய செயலி ஒன்றினை மத்திய அரசு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் வணிகர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வாங்கும் செயல்பாட்டினை, வங்கிக்கு கிரிடிட் பெற்றுக் கொள்ளும் முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு தேவையானது ஒர் பையோமெட்ரிக் டிவைஸ் -(பிங்கர்பிரிண்ட் ரீடர்) மட்டும் தான். இதன் விலை ரூ.3000. விவரம் விடியோவில்

இதற்காகவே அனைத்து வங்கிக் கணக்குகளிலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது மத்திய அரசு.

ஆதார் ப்ராஜக்ட் பற்றிய வெள்ளை அறிக்கை தகவல்கள் படிக்க > https://uidai.gov.in/images/commdoc/whi ... livery.pdf

ஆதார் எவ்வாறு எல்லாம் பயன்பட போகிறது என்பது பற்றிய தகவல்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் சரியான தகவல்கள் மக்களிடம் செல்லவில்லை என்றே நினைக்கிறேன்.. அதிலும் குறிப்பாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க ... எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஆதார் பற்றிய தவறான பரப்புரையை செய்து, மக்கள் நலன் கருதாமல், அரசியல் சதுரங்கம் விளையாடியது தற்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும்.... அதைப்போல் தற்போதைய ரூபாய் நோட்டு தடை விடயத்தில் அரசியல் விளையாட்டு ஆடுகிறதே தவிர மக்கள் நலன் அல்ல!