Page 1 of 1

அவகாசம் நெருங்குகிறது - அதிரடி தொடர்கிறது

Posted: Sat Dec 24, 2016 11:12 am
by ஆதித்தன்
நவம்பர் 8-ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.500 & ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துவிட்டு, கருப்பு பணத்தினை வெளிக் கொண்டுவருவதற்கும், டிஜிட்டல் யுகமாய் இந்தியாவினை மாற்ற பணமில்லா பரிவர்த்தனையும் ஊக்குவிப்பையும், செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது.

அரசு உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கையில், தெளிவாக இரண்டாம் கட்ட புள்ளிகளை கட்டுக்குள் கொண்டுவரும் அனைத்து அதிகாரமும் இருந்தும், பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட பணப்பாற்றாக்குறைப் போர், ஒர் மிகப்பெரிய விளம்பரம் மட்டுமே என பொதுமக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் பல ஊடகச் செய்திகள் அம்பலப்படுத்தி வருகின்றன.

இதுவரையில் கிட்டத்தட்ட 12.50 இலட்சம் கோடி பழைய நோட்டுகள் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது. மீதம் இருக்கும் நோட்டுகளில் கடந்த வாரம் கொஞ்சம் வந்திருக்கலாம். அதுமட்டுமில்லாமல், இன்னும் 5 நாட்கள் அவகாசம் இருப்பதால் அன்றும் பழைய நோட்டுகள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளதோடு, மேலும் அவகாசம் நீட்டிக்கும் கோரிக்கையினை ஊடகச் செய்திகள் மூலம் பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருக்கிறது.

போதுமான அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதோடு, வெளிநாடுகளுக்கு சென்றிருப்பவர்கள் என, மாற்று நிலையில் இருப்பவர்கள் மார்ச் மாதம் வரை ரிசர்வ் வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெளிவான அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும் பொழுது எதற்காக ஊடகங்கள் இத்தகைய கோரிக்கைச் செய்திகளை வெளிக்கொண்டு வருகின்றன என்பது கேள்விக்குறி.

ஒர் பக்கம் அதிரடி நடவடிக்கை மூலம் வங்கிக்கு வெளியில் பதுங்கிக் கிடக்கும் புதிய ரூபாய் நோட்டுகளை கட்டுக் கட்டாக வெளிக் கொண்டுவருவதோடு தங்கத்தினையும் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது, இத்தகைய நடவடிக்கைகளை பொதுமக்கள் பலரும் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இவர்களை வேட்டையாட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பணமில்லா போர் அவசியமா? என்பதுதான் சிந்திக்க வேண்டிய விடயம்.

அதாவது, இப்படி அப்படி என்று பணத்தினை பெற்று சுருட்டி வைக்கும் முதலைகளை முடக்கிவிட்டு, சட்டப்பூர்வமாக பணத்தினை வாரி விளையாட விடும் முதலைகள் கையில் புதிய தொழில் வாப்புகளைக் கொடுத்து முதலாளி ஆக்குகிறார்களோ என்று தோன்றுகிறது. அதாங்க, வங்கியில் கோடி கோடியாய் கடன் வாங்கி, மக்களுடன் நேரடி வியாபாரத்தில் இருக்கும் முதலாளிகள் கைக்குள் மேலும் பல தொழில்கள் செல்ல இருக்கிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது.

கடனாக இருந்தாலும் கணக்கில் இருக்கிறது, கருப்பு கணக்கில் இல்லையே என்பதும் ஒர் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டதும் நினைவில் கொண்டோம் என்றுச் சொன்னால் கருப்பாய் இருக்கும் பதுக்கல் பணத்திற்கான நடவடிக்கை சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது என மக்கள் பேச்சில் தெரிகிறது என அரசு மகிழ்ச்சியோடு இருப்பதோடு, அடுத்தடுத்து பல புள்ளிகளைப் பிடித்து, தனது ஆட்சிக்கான நற்பெயர் பொதுமக்களிடம் பெற அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.