அவசியமற்ற வருவாயால் துன்பப்படப்போகும் பொது மக்கள்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அவசியமற்ற வருவாயால் துன்பப்படப்போகும் பொது மக்கள்

Post by ஆதித்தன் » Thu Dec 22, 2016 10:17 am

உழைக்கும் மக்கள் யார் யாரென்று பட்டியலிடச் சொன்னால், எல்லோருமே பணத்திற்காக உழைக்கிறார்கள், இதில் என்ன பட்டியல் இருக்கிறது என்றுதான் தோன்றும். ஆனால் உண்மையான தேவையான ஒர் ஜான் வயிற்றினை நிரப்புவதற்காக உணவு விளைவிப்பதில் உழைப்பைக்கொடுக்கும் மக்களே சிறந்த உழைக்கும் மக்கள் ஆவார்கள்.

உழைக்கும் விவசாயி நட்டம் அடைந்தாலும், அவர் விளைவித்த பொருளை மக்களிடம் கொண்டு சேர்த்து பணம் வருவாயாக மாற்றும் வியாபாரிகள் நட்டம் அடைவதில்லை என்பதனை நீங்கள் தெளிவாக உணர முடியும்.

தற்பொழுது ரொக்கப்பணமில்லா வர்த்தகத்தின் மூலம், விவசாயி - வியாபாரி என்பவர்களுக்கு மத்தியில் பேமண்ட் கேட்வேயாக ஒருவர் முழுமையான வருவாயினை மட்டுமே குறிக்கோளுடன் உள்ளே நுழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஒர் சில கார்ப்ரேட் முதலாளிகள் ஒவ்வொரு பண பரிவர்த்தனை மூலம் வருவாய் பார்க்க இருக்கிறார்கள். இதற்கான கூடுதல் தொகை பொதுமக்கள் தலையில் விழப்போகிறது.

நூறு ரூபாய் நோட்டு, ஒர் கையிலிருந்து மற்றொரு கை என ஒர் ஆண்டில் பல பலமுறை கைமாறும். இவ்வாறு கைமாறும் பொழுது எந்தவொரு கட்டணமும் ரொக்க வர்த்தகத்தில் கிடையாது. ஆனால், ரொக்கமில்லா வர்த்தகத்தில் ஒவ்வொரு முறையும் கேட்வேக்கு ஒர் கட்டணம் என்றுச் சொல்லி கடைக்குப் போய் பொருள் வாங்கினாலும், அவசியமில்லாமல் மற்றொருவர்க்கு கட்டணம் கொடுத்துவிட்டு வர இருக்கிறொம்.

கடந்த ஆண்டு படுகை தளத்தில் கட்டணம் வசூலிப்பதற்காக கேட்வே ஒன்று இணைத்திருந்தேன், பின்னர் நீக்கிவிட்டதனையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். காரணம், அவசியமில்லாமல் இவர்களுக்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்க வேண்டியிருக்கிறது என்பதுதான். இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது... பொருள்/சேவை வழங்குபவர்களுக்கு கூடுதல் சுமை விழுந்தால் அது நுகர்வோரையே பாதிக்கும்.

ஆக, ஆன்லைன் ட்ரான்ஸ்சாக்சன் மூலம் பாதிக்கப்படப்போவது அதிக விலை வழங்க இருக்கும் பொதுமக்களே.

கருப்பு பணம் ஒர் சில முதலைகள் வாய்க்குள் இருப்பதனை அறிந்தும், இலாவகமாக கருப்பை ஒழிக்கிறேன் என்றுச் சொல்லி மற்றொரு முதலையை விட்டு மக்களை துன்பத்தில் ஆழ்த்திய அரசின் வஞ்சகம் கூட தெரியா பொதுமக்கள், விழிப்பு அடைவது என்றோ?
Post Reply

Return to “படுகை ஓரம்”