செய்தித்தாள் தடை எப்பொழுது, கேட்பது வாழும் மக்கள்!

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

செய்தித்தாள் தடை எப்பொழுது, கேட்பது வாழும் மக்கள்!

Post by ஆதித்தன் » Wed Nov 30, 2016 11:20 pm

இந்தியா தனது ஐநூறு ஆயிரம் ரூபாய் தாள்களை தடை செய்ததன் மூலம் தற்பொழுது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உலகத்தில் புகுந்துவிட்டது, ஆனாலும் கணிணி மூலமும், மொபைல் மூலமும் செய்திகளை உடனுக்கூடன் இலவசமாக தெரிந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் இன்னும் காசு கொடுத்து செய்தித்தாள் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய ரூபாய் நோட்டு தடையினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளானதற்கு காரணம்.

ரூபாயினை டிஜிட்டல் மயமாக மாற்றுவதற்கு முன்னர் தடை செய்யப்பட்டிருக்க வேண்டிய செய்திகளை காகிதத்தில் அச்சடித்து வழங்குமுறையான செய்தித்தாள் வழக்கமுறை இன்னும் அவ்வாறே தொடர்கிறது.

ஒர் ஆண்டுக்கு முன்பே செய்திகளை காகிதத்தில் அச்சடிக்கும் முறையினை தடை செய்து, டிஜிட்டல் மயமாக மாற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

விரைவில் மக்கள், காகிதத்தில் வெளியாகும் நாளிதழ்கள் வாங்குவதனை நிறுத்துவார்கள் என்பதனை முழுமையாக நம்பலாம், இதன் மூலம் மரங்கள் கொஞ்சம் அழிவினை தவிர்த்துக் கொள்கிறது என்பதில் மகிழ்ச்சியடையலாம்.
Post Reply

Return to “படுகை ஓரம்”