பல நாட்களின் பின்
படுகைக்கு வந்து எம்
பழைய பதிவுகளை
பக்கம் புரட்டிப் பார்க்கையில்
பரவசமாகும் மனதும்
பழகிய உறவுகளின் நினைவும்
பாக்க வைக்கிறது எம்
விழியோரம் சில துளிகளை!
என் தோழி ஒருத்தி
நான் எழுதிய என்
தொடர்கதை பற்றி கேட்க
அதற்கான பதிவு தேடி
படுகையின் பக்கங்களை புரட்ட
பழைய நண்பர்களின் பின்னூட்டங்கள்
செல்ல சண்டைகள்
அன்பு நலன் விசாரிப்புக்கள்
மனதை பிழியும் பல
பாசமான நினைவுகள்
என்னை போல் இங்கு
எம் பழைய நட்புறவுகளை
மீட்டிப் பார்க்கிறார்கள் என
இப்போது என் மனம்
அங்கலாய்த்து நிற்கிறது.
புதியவர் பலருக்கு நான்
அறியாத முகமாக இருக்க
பழையவர்கள் நமக்கு
பாசமான முகமாக தெரிய
மீண்டும் மீட்டுகிறேன் நம்
படுகை உறவுகளின்
பாசமழையில் நனைந்திட
துடிக்கிறேன்.!
நீண்ட இடைவெளி
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
- satkunan
- Posts: 496
- Joined: Sat Nov 29, 2014 11:20 pm
- Cash on hand: Locked
Re: நீண்ட இடைவெளி
கவிதை சூப்பர்