ஆமணக்கு வீட்டில் வளர்க்கக்கூடாது, ஏன்?

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆமணக்கு வீட்டில் வளர்க்கக்கூடாது, ஏன்?

Post by ஆதித்தன் » Sun Oct 21, 2012 1:02 pm

Image
இருவிதையிலைத் தாவரமான ஆமணக்குச் செடியை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று பெரியவங்க சொல்வாங்க. அது ஏன் என்று கேட்டால் சரியாகப் பதில் சொல்லமாட்டார்கள். வளர்க்கக்கூடாதுன்னா கேளேன் என்று சொல்லிவிடுவார்கள். இவ்வாறு ஏன் என்ற வார்த்தைக்கு சரியாக பதில் சொல்லாவிட்டால் மூடநம்பிக்கை என்று சொல்லிவிட்டு தட்டிக்கழிப்பதும் ஒர் சிலரது வழக்கம். ஆனால், அந்த நம்பிக்கையும் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்கிற பொழுது, இடையில் இருப்பவர்கள் சரியாக தெரிந்து கொள்ளாமல் விட்டதற்காக எல்லாம் மூடநம்பிக்கை ஆகிவிடுமா அல்லது அதனை எதற்காக உருவாக்கினார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் நாமே மூடநம்பிக்கை என்று சொல்லிவிட முடியுமா? ஆகையால், கொஞ்சம் நிதானமாக அதனோடு அனுபவப்பட்டால் மட்டுமே அதன் உண்மை நிலையை உணர முடியும். அதில் ஒன்றுதான் இந்த ஆமணக்கு கதை.
http://upload.wikimedia.org/wikipedia/c ... gFruit.jpg[/fi]நான் தற்பொழுது மூன்று வருடமாக வசித்து வரும் வீட்டின் பின்பக்கம் பணப்பயிரான ஆமணக்குச் செடிகள் நிறைய வளர்ந்து, பச்சைப் பசேல் என்று காட்சி அளித்தன. நானும் ஆகா... எவ்வளவு பச்சைப் பசேல் என இருக்கிறது என்று நினைத்து சந்தேஷப்பட்டுக் கொள்வேன். ஆனால் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர், காலை விழித்ததும் பின்பக்கம் உள்ள மஸ்குட்டிப் புழு/கம்பளிப்பூச்சிகளை நசிக்கிக் கொள்வதனையே வேலையாக வைத்திருந்தார். எனது வீட்டின் கதவு அருகேயும் சேர்த்துத்தான்.... ஆகையால் நான் விழித்து வரும் பொழுது மஸ்க்குட்டித் தொல்லை இருக்காது. ஒர் வருடத்தில் அந்த நபர், புதியதாக வீடுகட்டி, காலிசெய்துவிட்டுச் சென்றுவிட்டார். ஆகையால் இரண்டாம் வருட மழைக்காலத்தில் அருகே வசித்தவர்கள் இளம் பேச்சுளர் பசங்க, இரண்டு பேர். அந்த பசங்களும் என்னைப் போல் பின்பக்கம் போய் சுத்தம் செய்வதும், கம்பளிப்பூச்சி அடிப்பதும் கிடையாது. ஆகையால், இரண்டாம் வருடத்தில் ஆமணக்குச் செடியினை நோட்டமிட்டு வரும் கம்பளிப்பூச்சியின் தொந்தரவு எனது ரூமிம் பாத்ரூமை மையமிட்டது. தினமும் காலை பின்பக்கம் சென்றால், கம்பளிப்பூச்சியினை தொடாமல், மேல் படாமல் எப்படி அடித்துக் கொள்வது என்றே பெரும் பிரச்சனை. பின்னே மேல் பட்டால் ஒரே ஊறலாக இருக்கும் அல்லவா. ஆகையால் கவனமாக தினமும் 10 பதினைந்து கம்ப்ளிப்பூச்சிகளை அடித்து வந்தேன்...

ஒர் நாள் அடர்ந்து வளர்ந்திருக்கும், ஆமணக்குச் செடிகளை பில்டிங்க் ஓனர் வெட்டிச் சாய்க்க ஆட்களை நியமித்தார். என்னடா, பின்னால் பச்சைப்பசேல்னு வளர்ந்து நிற்கும் இச்செடிகளைப் போய் வெட்டச் சொல்கிறாரே! இதன் விதையையும் விற்றால் காசு கிடைக்குமே? ஏன் வெட்டச் சொல்கிறார் என்று தெரியாமல் இருந்தேன். பின் பார்த்தால், அனைத்து மஸ்க்குட்டிப் புழுக்களின் உணவாக அந்த ஆமணக்கு இலைகளாகத்தான் இருந்திருக்கிறது. ஒவ்வொரு செடிக்கு அடியிலும் மொந்தமாக நிறைய கம்ப்ளிப்பூச்சிகள். அச்செடிகளை எல்லாம் வெட்டிச் சாய்த்தப் பின்னர், கொஞ்சம் தொந்தரவு குறைந்தது.
http://tamil.boldsky.com/img/2011/05/23 ... oil300.jpg[/fi]ஆகையால், இந்த வருடம் கடந்த மாதம் மழை பெய்ததுமே முளைத்த அனைத்து ஆமணக்கு செடிகளையும் பிடிங்கி நானே எறிந்துவிட்டேன். பின்னே, கடந்த இரண்டு வருட அனுபவம் சும்மா விடுமா.. அவ்வாறு பிடிங்கி எறியும் பொழுது பார்த்தால் அங்காங்கே அச்செடியின் இலையில் கம்ப்ளிப்பூச்சி உட்கார்ந்து பாதி தின்று வைத்திருக்கும். எத்தனையோ செடிகள் வளர்கிறது, ஆனால் இவற்றின் ஆசை உணவாக அச்செடிகள் உள்ளன. ஆகையால், இந்த வருடம் ஒர் செடியைக்கூட வளர விடக்கூடாது என்று அவ்வப்பொழுது முளைப்பதனை பிடிங்கி எறிந்து வருகிறேன். கடந்த இரண்டு நாள் பெய்த மழையால் முளைத்த செடிகளையும் கடந்த ஒர் மணி நேரத்திற்கு முன், பிடிங்கி எறிந்துவிட்டு வருகிறேன். தற்பொழுது கம்ப்ளிப்பூச்சி தொந்தரவு இல்லை.


ஆகையால், பணப்பயிரான ஆமணக்கை விளையில் வளருங்கள், வீட்டில் அலங்காரச் செடிகளின் நடுவே வளர்க்காதீர்கள்.
Post Reply

Return to “படுகை ஓரம்”