அம்பேத்கர்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

அம்பேத்கர்

Post by thiruusha » Sun Jan 25, 2015 8:55 pm

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர்
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
13 அக்டோபர் 1935 அன்று நாசிக்கில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகின்றார்
பிறப்பு பீமாராவ் சக்பால் அம்பேவாதேகர்
ஏப்ரல் 14, 1891
மாவ் (Mhow), பிரித்தானிய இந்தியா (இப்போது மத்தியப் பிரதேசம்)
இறப்பு திசம்பர் 6, 1956 (அகவை 65)
தில்லி, இந்தியா
தேசியம் இந்தியர்
மற்ற பெயர்கள் பாபா சாகேப், பாபா, பீமா, மூக்நாயக்
படித்த கல்வி நிறுவனங்கள் மும்பை பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகம்
இலண்டன் பொருளாதாரப் பள்ளி
அமைப்பு(கள்) சுதந்திர தொழிலாளர் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு
பட்டம் முதல் இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவின் தலைவர்
அரசியல் இயக்கம் தலித் பௌத்த இயக்கம்
சமயம் பௌத்தம்
வாழ்க்கைத் துணை இராமாபாய் அம்பேத்கர் (தி. 1906)[1]
சவிதா அம்பேத்கர் (தி. 1948)[2]
விருதுகள் பாரத ரத்னா


பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.
Post Reply

Return to “படுகை ஓரம்”