பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Post by rajathiraja » Mon Mar 12, 2012 8:24 am

மார்ச் 8ம்தேதி உலக மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த மகளிர் தின கூட்டத்தில் ஒரு பெண் அமைச்சர், 'சீனாவில் திருமணத்திற்கு முன்பே பாலுறவு வைத்துக் கொள்வதை தவறாக அவர்கள் கருதுவதில்லை' என்று குறிப்பிட்டார். அது தான் எனது இந்த கட்டுரைக்கு காரணமாக அமைந்தது.

பெண் சுதந்திரம் எனப்படுவது இது தானா?
ஆடைகளை களைவதும் யாரும் யாருடனும் செல்லலாம் என்பது மட்டும் தான் பெண்ணுரிமையா?
தான் சுதந்திரமானவள் என்று சொல்லும் ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் திரைப்படத்தில் நடிக்கிறாள். அதன் போஸ்டர் ஒட்டப்படுகிறது். அந்த போஸ்டர் ஆபாசமானது என்று கூறி வேறு சில பெண்கள் அதை கிழித்தெறிகிறார்கள் அல்லது அதன் மீது தார் பூசுகின்றனர். இதில் நடித்த பெண்ணின் உரிமை பாதிக்கப்படுகிறதா என எனக்கு புரியவில்லை. பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கொண்டாடப்படும் இந்த மகளிர் தினத்தில் ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை என்ற முழக்கம் மட்டுமே ஒலிக்கின்றது.

Image

என்னை பொறுத்தவரை பெண்ணுக்கு பெண் தான் எதிரி.
முதலில் பெத்ததும் பெண் குழந்தை, இப்பொழுது பெத்ததும் பெண் குழந்தையா? என்ற மாமியாரின் அதட்டலின் காரணமாக மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிட்டால் அதன் வாயில் நெல்மணியையோ கள்ளிப்பாலையோ ஊற்றி அந்த பச்சிளங்குழந்தையை கொல்வது தாய் எனும் பெண் தான்.

எனது மூத்த மகனுக்கு இவ்வளவு வாங்கினேன், எனவே நீயும் வாங்கி வா என மருமகளை கொடுமைபடுத்துவதும் மாமியார் எனும் பெண் தான். ஸ்டவ் வெடிப்பதற்கு முக்கிய காரணம் மாமியார் எனும் பெண் தான். வரதட்சணைக்கு முக்கிய காரணம் மாமியார் எனும் பெண் தான். எனவே நான் மாமியாராகும் பொழுது எனது மருமகளை இவ்வாறு கொடுமைப்படுத்தமாட்டேன் என இன்றைய மருமகள்கள் இந்த மகளிர் தினத்தில் முடிவெடுக்க வேண்டும்.

அடுத்ததாக திருமணமான ஒருவனுடன் கள்ளத்தனமாக உறவு வைத்து இன்னொரு பெண்ணின் வாழ்வை சீரழிப்பது இன்னொரு பெண்ணே. என்னுடைய மனைவியை நீ எப்படி அனுபவிக்கலாம் என்று கணவன் கத்தியை எடுக்கிறான். அல்லது நமது உறவு கணவனுக்கு தெரிந்து விட்டதே என எண்ணி கணவனுக்கு எதிராக கள்ளகாதலர்கள் கத்தியை எடுக்கின்றனர். பெண்ணால் தான் உயிர்பலி ஏற்படுகின்றது. சில இடங்களில் கள்ளகாதல் காரணமாக மனைவியை விட்டு கணவன் பிரிந்து விடுவதால் மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள்.

எனவே முறையாக திருமணம் செய்யாமல் இன்னொரு பெண்ணின் கணவனுடன் தொடர்பு வைக்க மாட்டேன் என்று இந்த மகளிர் தினத்தில் பெண்கள் முடிவெடுக்க வேண்டும்.

Image

இன்று வயதான தாய்மார்கள் ரோடுகளில் பிச்சை எடுத்து திரிவதற்கும் பிளாட்பார்மில் தங்குவதற்கும் மருமகள் என்ற பெண்தான் காரணம். எனது கணவனின் தாயை எனது தாயை போன்று கவனிப்பேன் என ஒவ்வொரு மருமகளும் நினைப்பார்களானால் இன்று தெருக்களில் பிச்சை எடுக்கும் பெண்மணிகளை பார்க்கவே இயலாது. எனவே இந்த மகளிர் தினத்தில் அந்த நல்முடிவை மருமகள்கள எடுக்க வேண்டும்.

இதைத்தவிர ஆணாதிக்கம், ஆணாதிக்கம் என்று வெற்றுக் கூச்சல் போட்டு விட்டு அன்று ஒருநாள் மட்டும் கூடிக்கலைவதால் யாருக்கேனும் பயனுண்டா?


--படுகைக்காக ராஜா
Last edited by rajathiraja on Sat Mar 24, 2012 5:57 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 8:50 am

நல்லதொரு பதிவு.

பெண்ணடிமை எனச் சொல்லும் அனைவருக்கும் தக்க பதில் வாதம் இருக்கிறது. ஆனால், புரிந்து கொள்ளும் விதத்தில் அவர்கள் இல்லை.

க்டந்த 2 வருடத்திற்கு முன்பு, ஏதோ ஒர் பெண் தன் வலைப்பூவில், பெண்ணடிமை என ஆண்கள் செய்யும் தவறினையும் தங்களுக்கும் அதே உரிமை வேண்டும் என்றும் தவறுதலான ஒர் பாதையினை கொண்டுள்ளதை கவனிக்க முடிந்தது. கண்டதும் பதிலும் கொடுத்தேன்.

உண்மையில் பெண்ணடிமை எனச் சொல்வர்கள் ஒர் தவறான பாதையினைக் கொண்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை. தொகையில் சரி பாதி இருக்கிறோம் என்பதற்காக, தங்களது விருப்பத்திற்காக எடுத்திருக்கும் தவறான ஆயுதம் பெண்ணுரிமை. ஏன் சொல்கிறேன் என்றால், நம் சமூகத்தில் பெண்களுக்கு கொடுத்திருப்பது உயர்வான இடம்.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Post by rajathiraja » Mon Mar 12, 2012 3:17 pm

நன்றி.. சகோதரரே!... .
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Post by umajana1950 » Mon Mar 12, 2012 6:17 pm

எனது கணவனின் தாயை எனது தாயை போன்று கவனிப்பேன் என ஒவ்வொரு மருமகளும் நினைப்பார்களானால் இன்று தெருக்களில் பிச்சை எடுக்கும் பெண்மணிகளை பார்க்கவே இயலாது. எனவே இந்த மகளிர் தினத்தில் அந்த நல்முடிவை மருமகள்கள எடுக்க வேண்டும்.
பெண்கள் சிந்தித்து எடுக்க வேண்டிய முடிவு தான். பொறுத்திருந்து பார்ப்போம்.
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Post by ramkumark5 » Mon Mar 12, 2012 6:56 pm

நீங்க சொன்னது எல்லாம் சத்தியம் ராஜா சார். ஆனா இப்படி உண்மைய சொன்னா, பெண்களை இழிவா பேசுறதா சொல்லும் கூட்டமும் இந்த சமுதாயத்தில் தானே வாழ்கிறது.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Post by muthulakshmi123 » Tue Mar 13, 2012 9:56 pm

பெண்ணிற்கு பெண் தான் எதிரி என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை..நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்...
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Post by udayakumar » Wed Mar 14, 2012 12:22 am

சிறப்பான கருத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறீர்கள் திரு ராஜா அவர்களே!
ஏனெனில் இன்றைய இளைய சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறதென்றால் அவர்கள் செல்லும் பாதை அழிவை நோக்கியது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும். முதலில் ஒரு பெண் சமுதாயத்தில் ஏன் இவ்வாறான தவறுகளில் விழுகிறாள் என்பதையும் பார்க்க வேண்டும்..
அவர்கள் ஆணுக்கு நிகராக பெண் இன்று சம உரிமை படைத்தவள் என்று எதனைக் குறிப்பிடுகிறார்கள் என்றால் அது ஒரு சமுதாயம் ,தேசியம், நாட்டின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டதே தவிர ஒரு பெண் ஆணுக்கு நிகரானவள் என தனது கணவனிடத்திலோ,பெற்றோரிடத்திலோ காண்பிப்பதற்காக அல்ல.. ஒரு கணவன் குடும்பத்தில் தினமும் வாதம் செய்யும் மனைவியுடன் ஏற்படும் சண்டை சச்சரவுகளால் வேறு உறவுகளை தேட ஆரம்பிக்கும்போது அவனை பல்லேறு வழிகளில் இன்று வசீகரிக்க வருபவளும் ஒரு பெண்தான் ..
இங்கு தவறான தொடர்பு ஏற்பட்டு அது விபரீதத்தில் முடியும்போது .. தான் தவறே செய்யவில்லை தன் கணவன் தவறாக போய்விட்டார் எனக் கதறுவதில் அர்த்தமில்லை. நீ வளமாக வாழ்வதற்கும் உன் குடும்பத்தை ,சமுதாயத்தை ,இந்த நாட்டை முன்னேற்ற எந்த இடத்தில் ஆணுக்கு நிகராக உன் ஆற்றல் தேவைப்படுகிறதோ !!! அங்கு மட்டும் உபயோகிக்க தெரிந்தவள்தான் புத்திசாலியான பெண்ணுரிமையை காக்கத் தெரிந்த பெண்...

உதாரணத்திந்கு இன்று தமிழக பேரூந்துகளில் மகளீர் பக்கம் என தனியாக ஒரு பகுதியை ஒதுக்கி தமிழக அரசால் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது .. இதில் எத்தனை பெண் அராஜகங்கள் நடக்கின்றன தெரியுமா?
பெண் இருக்கையில் ஒரு ஆண்மகன் அமர்ந்து பயணம் செய்தால் அவர் பலவந்தமாக எழுப்பப்படுகிறார்...
ஆனால் அதே பேரூந்தில் ஆண்கள் பக்கத்திலும் பெரும்பாலும் பெண்கள் உட்கார்ந்து செல்கிறார்கள் .. இங்கு ஆண்கள் கொடி பிடித்தால் நிலமை என்னாகும்... உங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை மற்றவர்களை புண்படுத்தாத வகையில் பயன்படுத்தும் பெண்ணியம் நல்ல கண்ணியம் இருக்க வேண்டும் பெண்ணிடம்...
70 வயது மதிக்கத்தக்க ஒரு வயோதிபரை எழுப்பிவிட்டு ஒரு 20 வயது பெண் இருக்கையில் அமர்வதை பார்க்கும் இது தமிழ்நாட்டுக் கலாச்சாரமா என வெட்கப்பட தோன்றுகிறது...
அதே நேரம் இன்று ஊடகங்களும் ஊதித்தள்ளும் ஒன்றுமில்லாத விசயங்களும் ஏராளம் ...விகாரத்து என்பது ஒரு நாளைக்கு இந்தியாவில் இலட்சக் கணக்கில் நடக்கிறது...ஆனால் பிரபலமான யாராவது ஒரு பெண் வாழ்வில் கணவனுடன் பிரிந்து வாழ நினைத்தால் அது பிளாஸ் நியூஸ் ஆகிறது.. அவர்களுக்கு மன உளைச்சலைக் கொடுத்து விரக்தியின் ஓரத்திற்கு கொண்டு வருவதற்கு உறுதுணை புரிகிறார்கள்..
ஆணுக்கு என்ன வரைமுறையோ அவன் ஆணமகனாகவும் ...பெண் என்பவன் பெண்ணாகவும் தன் பிறப்பை உணர்ந்து வாழ்ந்தாலே பெண்ணுரிமை கேட்டு போராட வேண்டிய தேவை வராது...

பாதி மக்களைக் கெடுப்பது இந்தியாவின் ஊழல் பிடித்த செல்லாக்காசு அரசியல்... மக்கள் வேலை செய்யாமல் கூலிக்கொடுத்து உழைப்பை மறக்கச் செய்கிறார்கள்.. இலவச அரிசி வேறு..
அவசர மருத்துவக் காப்பீடு கொடு தேவையான விடயம்
...அது ஏழைகள் எல்லோருக்கும் கிடைக்கிறதா?
மக்களின் உழைக்கும் திறனைக் கெடுத்து மக்களை சோம்பேறிகளாக்கி உங்கள் சாதனைகளை அடுத்த ஐந்தாண்டில் கூவிக் கூவிச் சொல்லி மக்களின் வரிப் பணத்தை மக்களிடமே கொட்டி சமுதாயத்தை நாசமாக்குவதே இந்த அரசியல்வாதிகள்தான்.. பெண்கள் உசாராக இருந்து கொள்ளுங்கள் .. உங்களை நீங்கள் இந்த சமுதாயத்தில் அடையாளப்படுத்துங்கள் .. நீங்கள் நீங்களாக கொளரவமாக வாழ்ந்தாலே ஆண் சமூகம் அவர்களாக வாழ உங்களிடமிருந்து நல்லவற்றைக் கற்றுக் கொண்டு போகட்டுமே ..

நாடு தலைநிமிர சொந்த உழைப்பை நம்பு ..வறுமையை விரட்டு.... வேலை வாய்ப்பை தேடிக்கொள் .. இந்தியாவில் பிழைக்க வழியில்லை என்றால் சுத்தப் பொய் நீ சோம்பேறி என்று அர்த்தம்.

சுயமாக வாழக் கற்றுக் கொள் நீ ஆண் ,நான் பெண் என்று பேதமை பேச நேரமிருக்காது உனக்கு ... ஒரு ஒளிமயமான கனவு உனக்குள் ஒளிவீசிப் பிரகாசிக்கும்..
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Post by rajathiraja » Wed Mar 14, 2012 1:00 am

udayakumar wrote:ஆணுக்கு நிகராக பெண் இன்று சம உரிமை படைத்தவள் என்று எதனைக் குறிப்பிடுகிறார்கள் என்றால் அது ஒரு சமுதாயம் ,தேசியம், நாட்டின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டதே தவிர ஒரு பெண் ஆணுக்கு நிகரானவள் என தனது கணவனிடத்திலோ,பெற்றோரிடத்திலோ காண்பிப்பதற்காக அல்ல..

udayakumar wrote:இங்கு தவறான தொடர்பு ஏற்பட்டு அது விபரீதத்தில் முடியும்போது .. தான் தவறே செய்யவில்லை தன் கணவன் தவறாக போய்விட்டார் எனக் கதறுவதில் அர்த்தமில்லை.
udayakumar wrote:நீ வளமாக வாழ்வதற்கும் உன் குடும்பத்தை ,சமுதாயத்தை ,இந்த நாட்டை முன்னேற்ற எந்த இடத்தில் ஆணுக்கு நிகராக உன் ஆற்றல் தேவைப்படுகிறதோ !!! அங்கு மட்டும் உபயோகிக்க தெரிந்தவள்தான் புத்திசாலியான பெண்ணுரிமையை காக்கத் தெரிந்த பெண்...
udayakumar wrote:ஆணுக்கு என்ன வரைமுறையோ அவன் ஆணமகனாகவும் ...பெண் என்பவன் பெண்ணாகவும் தன் பிறப்பை உணர்ந்து வாழ்ந்தாலே பெண்ணுரிமை கேட்டு போராட வேண்டிய தேவை வராது...
udayakumar wrote:உங்களை நீங்கள் இந்த சமுதாயத்தில் அடையாளப்படுத்துங்கள் .. நீங்கள் நீங்களாக கொளரவமாக வாழ்ந்தாலே ஆண் சமூகம் அவர்களாக வாழ உங்களிடமிருந்து நல்லவற்றைக் கற்றுக் கொண்டு போகட்டுமே ..
அருமையான தொடர்ச்சியை தந்திருக்கின்றீர்கள் உதய்! :thanks:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Post by muthulakshmi123 » Wed Mar 14, 2012 10:45 am

rajathiraja wrote:
udayakumar wrote:ஆணுக்கு நிகராக பெண் இன்று சம உரிமை படைத்தவள் என்று எதனைக் குறிப்பிடுகிறார்கள் என்றால் அது ஒரு சமுதாயம் ,தேசியம், நாட்டின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டதே தவிர ஒரு பெண் ஆணுக்கு நிகரானவள் என தனது கணவனிடத்திலோ,பெற்றோரிடத்திலோ காண்பிப்பதற்காக அல்ல..

udayakumar wrote:இங்கு தவறான தொடர்பு ஏற்பட்டு அது விபரீதத்தில் முடியும்போது .. தான் தவறே செய்யவில்லை தன் கணவன் தவறாக போய்விட்டார் எனக் கதறுவதில் அர்த்தமில்லை.
udayakumar wrote:நீ வளமாக வாழ்வதற்கும் உன் குடும்பத்தை ,சமுதாயத்தை ,இந்த நாட்டை முன்னேற்ற எந்த இடத்தில் ஆணுக்கு நிகராக உன் ஆற்றல் தேவைப்படுகிறதோ !!! அங்கு மட்டும் உபயோகிக்க தெரிந்தவள்தான் புத்திசாலியான பெண்ணுரிமையை காக்கத் தெரிந்த பெண்...
udayakumar wrote:ஆணுக்கு என்ன வரைமுறையோ அவன் ஆணமகனாகவும் ...பெண் என்பவன் பெண்ணாகவும் தன் பிறப்பை உணர்ந்து வாழ்ந்தாலே பெண்ணுரிமை கேட்டு போராட வேண்டிய தேவை வராது...
udayakumar wrote:உங்களை நீங்கள் இந்த சமுதாயத்தில் அடையாளப்படுத்துங்கள் .. நீங்கள் நீங்களாக கொளரவமாக வாழ்ந்தாலே ஆண் சமூகம் அவர்களாக வாழ உங்களிடமிருந்து நல்லவற்றைக் கற்றுக் கொண்டு போகட்டுமே ..
அருமையான தொடர்ச்சியை தந்திருக்கின்றீர்கள் உதய்! :thanks:
உதய் யின் தொடர் பதிவுகளை ப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு...
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Post by udayakumar » Thu Mar 15, 2012 12:33 am

இதில் இன்னும் நிறைய சமுதாயத்திற்கு தேவையான விடயங்களை ஒவ்வொருவரும் குறிப்பிட்டால் சிறப்பாக அமையும்..
Post Reply

Return to “படுகை ஓரம்”