நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் நூல் இழை வித்தியாசம்தான

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் நூல் இழை வித்தியாசம்தான

Post by ரவிபாரதி » Thu Jun 05, 2014 7:22 pm

நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் நூல் இழை வித்தியாசம்தான்! இயக்குநர் ராம்குமார்

Image


9நம்பிக்கைதானே வாழ்க்கை…! கஷ்ட காலங்கள் வரும் போது இந்த வசனத்தைப் பேசாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்போதும் மாய மந்திரங்கள் மூலமாக நிறைய சாமியார்கள் அற்புதங்கள் செய்வதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் என மனசுக்குள்ளே ஒரு சின்ன அலசல். கடவுளிடம் நாம் செய்கிற பிரார்தனை நம்பிக்கையா, மூட நம்பிக்கையா என்பது வரை நண்பர்களோடு விவாதம் போகும். நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் நூல் இழை வித்தியாசம்தான். சாண் ஏறினால் முழம் சறுக்கிற பாசி பிடித்த பாறை மாதிரி இருக்கிறது நம்ம வாழ்க்கை. அதில் ஒருவன் வழுக்காமல் இருப்பதற்கு மூடநம்பிக்கைகள் உதவும் என்றால், அது காலப்போக்கில் நம்பிக்கையாகத்தானே பார்க்கப்படும். இந்த வித்தியாசம்தான் இந்தப் படம். பரவசமாக சிரிக்கிறார் இயக்குநர் ராம்குமார். “முண்டாசுப்பட்டி’ படத்தின் இயக்குநர். குறும்பட உலகத்தில் இருந்து கோடம்பாக்கம் வந்திருக்கும் இன்னொரு இளம் படைப்பாளி.

குறும்பட உலகத்தில் இருந்து சினிமாவுக்கு…. வாழ்த்துக்கள் ராம்….?
இதைச் சுலபமாக்கி கொடுத்த சீனியர்களுக்கு நன்றி. நான் திருப்பூர்க்காரன். சின்ன வயதில் இருந்தே ஓர் ஆர்வம். எதில் என்பதில்தான் தெளிவு இல்லை. புத்தகங்கள் திறந்து வைத்த உலகம், நல்ல சினிமாக்கள் கொடுத்த நம்பிக்கை இன்னும் பிற நல்ல விஷயங்கள்தான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. பள்ளிப் படிப்புக்குப் பின் மனசு எங்கேயும் ஒருங்கிணைத்து நிற்கவில்லை. கார்ட்டூனிஸ்ட் என்கிற முகம் நல்ல தளத்தை சென்னையில் உண்டாக்கி கொடுத்தது. அவ்வப்போது பத்திரிகைகளுக்கு கருத்துக்கள் நிறைந்த கார்ட்டூன்களை வரைந்து அனுப்பி வந்தேன். அதுதான் பலருக்கும் எனக்குமான தொடர்பை பெரிதாக்கி கொடுத்தது. “நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி அறிவிப்பு வந்ததும் ஒரு குறும்படம் எடுத்தேன். மூட நம்பிக்கைகளில் திளைத்து கிடக்கிற ஒரு பழம் கிராமத்தில் நடக்கும் சுவாரஸ்யங்கள் என “தீம்’ பிடித்து “முண்டாசுப்பட்டி’ என்ற பெயரிலேயே ஒரு படம் இயக்கினேன். படத்துக்கு நல்ல ரிசல்ட். பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள். “”திரைக்கதை அமைக்கும் யுக்தி தெரிந்திருக்கு… அப்படியே சினிமா பக்கம் ஆர்வம் காட்டுங்க…” என நிறைய நண்பர்கள் உத்வேகம் கொடுத்தார்கள். உறவுகள் நம்பிக்கை வைத்தார்கள். தயாரிப்பாளர் சி.வி.குமார் வாய்ப்புக் கொடுத்தார். இப்படித்தான் உருவானது இந்த “முண்டாசுப்பட்டி’.

கதை, களம் என அனைத்திலும் புது “தீம்’ பிடிப்பது குறும்பட படைப்பாளிகளின் ஸ்பெஷல்…. இது எப்படியிருக்கும்…?
“முண்டாசுப்பட்டி’ என்கிற கிராமத்தில் நடக்கிற பிரச்னைகள், சம்பவங்கள்தான் கதை. 80-களில் மூட நம்பிக்கைகளில் திளைத்து கிடக்கும் மனிதர்களை அறிவியலும், வளர்ந்து வந்த தொழில்நுட்பங்களும் எந்த எல்லைக்கு கொண்டு சென்றன என்பதுதான் கதை. நம்பிக்கையோ, மூட நம்பிக்கையோ எதுவாக இருந்தாலும், அதில் நம் நாட்டின் கலாசாரமும் புதைந்து இருந்தது. காலில் செருப்பில்லாமல் நடக்கிற மக்கள் இங்கே கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களின் பயணத்தின் இடையில் இளைப்பாற திண்ணை கட்டி வைக்க வேண்டும் என யோசித்த ஒருவனின் பின்னணியில் தமிழ் இனத்துக்கான புதிய கலாசாரம் தோன்றியது. பனை மரங்களை வெட்டினால் அய்யனார் சாமி தண்டிக்கும் என சொல்லப்பட்ட வார்த்தைக்கு பின்னால் ஓர் இனத்தில் நம்பிக்கை துளிர் விட்டது. இரவு படுக்கும் போது சாப்பாட்டை கொஞ்சமாவது மிச்சம் வைக்க வேண்டும். திடீர் விருந்தாளிகள் வந்தால் சாப்பாடு போட வேண்டும் என்பது எங்கேயும் காணக் கிடைக்காத நம் இனத்தின் கலாசார அடையாளம். இப்படி கலாசாரம் என்று நாம் பார்க்கிற எல்லா விஷயங்களுமே ஒரு காலத்தில் மூட நம்பிக்கையாகத்தான் முளைத்து வந்திருக்கும். ஒவ்வொரு பழக்கங்களுக்கு பின்பும் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. காரணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி நாம் யோசிக்க மாட்டோம். அப்படியான சில பழக்கங்களை இதில் துணிச்சலாக பேசியிருக்கிறேன்.

விஷ்ணு, “அட்டக்கத்தி’ நந்திதா இது மாதிரியான சினிமாவுக்குப் புதிதான நட்சத்திரங்கள்தானே….?
விஷ்ணுவிடம் எப்போதும் ஒரு புன் சிரிப்பு இருக்கும். அதுதான் இந்த கதைக்கு ப்ளஸ். 80-களின் தோற்றங்களை விஷ்ணுவுக்கு கொண்டு வருவதில் எந்தச் சிக்கலும் இல்லை. நல்ல தமிழ் முகம். சின்ன சின்ன மாற்றங்களில் அவரைக் கொண்டு வந்து விட்டோம். நந்திதா மார்டன் பொண்ணாக இருந்தாலும், அந்த தெத்துப்பல் அவ்வளவு அழகு. தெத்துப்பல் அழகுக்கு தாவணி, பாவடைதான் எப்போதுமே அழகு. “அட்டக்கத்தி’யில் பார்த்ததை விட இன்னும் பாந்தமான அழகு இதில் இருக்கும். எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன் சாண் ரோல்டன் இசை. குறும்படத்தில் பணியாற்றிய பி.வி.சங்கரே இதற்கும் கேமிராமேன். இன்னும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாருமே இதற்கு பலம். சின்ன சின்ன இடைவெளிகளில் ஒரு ட்விஸ்ட்டை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட்டாலே வேறு எதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். இதுதான் எங்கள் “டீம்’ தாரக மந்திரம்.

நான்கு நிமிட குறும்படத்தை முழு நேர சினிமாவாக்குவது.அத்தனை சுலபமான காரியமில்லை… அப்படி செய்யும் போது சவால்கள் அதிகமாக இருக்குமே….?
அடுத்து சினிமாதான் என முடிவான பின், யாரிடமாவது உதவி இயக்குநராக சேரத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நண்பர்கள்தான் “”உங்க படங்களில் நல்ல மேக்கிங் தெரிகிறது. இது போதும்… சினிமாவுக்கான திரைக்கதையைத் தேர்ந்தெடுங்க…” என தைரியம் கொடுத்தார்கள். இருந்தாலும் ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்ஷன் என எல்லாவற்றிலும் ஹோம் ஒர்க் செய்து சினிமாவைத் தெரிந்துக் கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலான உழைப்பு தேவைப்பட்டது. குறும்படத்திற்கு எல்லா வேலைகளையும் நாமேதான் பார்க்க வேண்டும். ஆனால் சினிமாவில் அப்படியில்லை. திரைக்கதை, இயக்கம் என பெரிய பொறுப்புகள் வந்து விடும். அந்த பொறுப்புக்கு ஏற்ற நல்ல உழைப்பைக் கொடுத்தாலே போதும். எல்லா குறும்படங்களும் ஜெயித்து விடும் என்ற நம்பிக்கை ஆபத்தானது. கிட்டத்தட்ட அதை மனதில் ஏற்றிக் கொண்டாலே குறும்படத்தை விட, சினிமா சுலபமாகத்தான் இருக்கும்.
Post Reply

Return to “படுகை ஓரம்”