அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
Fasmeer
Posts: 5
Joined: Sun Jan 26, 2014 11:49 am
Cash on hand: Locked

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Post by Fasmeer » Sun Jan 26, 2014 6:03 pm

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன்
யோசியுங்கள்,
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய
ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர்
அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும்,
நான்
தலையசைக்கும் போது தானும்
தலையசைக்கும் நண்பன் எனக்குத்
தேவையில்லை.அதற்கு என்
நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக்
கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம்.
அதுதான் என்னை
மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள்
இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய
தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான
தகவல்களை வைத்துக்கொண்டு சரியான
முடிவுக்கு வரும்
ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில்
ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில்
ஒரு ஆண்டு இழப்பு. திருமணம்
பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர்.
ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்.
12. எல்லோரையும்
நேசிப்பது சிரமம்.ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்.
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம்
தோன்றுவதில்லை. ஆனால் காரணம்
நல்லதாய் இருப்பதில்லை.
15. இவர்கள் ஏன் இப்படி?என்பதை விட,
இவர்கள் இப்படித்தான் என
எண்ணிக்கொள்/
16. யார்
சொல்வது சரி என்பதல்ல,எது சரி என்பதே
முக்கியம்.
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள்.
ஒருமுறை முடிவெடுங்கள்.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்.
19. நியாயத்தின்
பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன்
பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும்.
பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழவிடுவதும்
நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற
முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக
மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்
25.செய்வதற்கு எப்போதும்
வேலை இருக்கவேண்டும் . அப்போது தான்
முன்னேற முடியும்.
26. அன்பையும் ஆற்றலையும்
இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்.
27. வெற்றி பெற்றபின்
தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன்,
இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்...
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப் படுத்த
வேண்டும்என்று எதிர்பார்க்காமல்,நாம்
பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க
வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான
பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான
விளக்கம் தான் கடினம்.
31.ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப
வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க
வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த
பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான்
கோழைத்தன்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம்
பேரைச்
சிந்திக்க வைக்கிறது.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Post by சாந்தி » Sun Jan 26, 2014 6:06 pm

அருமை..அருமை...அருமை...
Fasmeer
Posts: 5
Joined: Sun Jan 26, 2014 11:49 am
Cash on hand: Locked

Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Post by Fasmeer » Sun Jan 26, 2014 6:12 pm

:thanks:
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Post by cm nair » Sun Jan 26, 2014 10:10 pm

GOOD POINTS......
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Post by mubee » Wed Feb 12, 2014 2:28 pm

Nice :great:
:thanks:
User avatar
sabras
Posts: 276
Joined: Wed Dec 25, 2013 8:41 pm
Cash on hand: Locked

Re: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Post by sabras » Wed Feb 12, 2014 2:42 pm

super :great:
Post Reply

Return to “படுகை ஓரம்”