"நல்லவை நான்கு"

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

"நல்லவை நான்கு"

Post by cm nair » Sat Dec 28, 2013 10:30 pm

ஒரு மணி நேரத்தை உபயோகமில்லாது வீணடிப்பவன் வாழ்வீன் மதீப்பீடு அறியான்

ஒரு மணி நேரத்தை உபயோகமின்றி செலவழிப்பவனுக்கு வாழ்வின் மதிப்புபுரியாது

ஒரு மதவாதியை சந்தித்தபின் கையை கழுவ வேண்டுமென உறுத்துகிறது

ஒரு மந்தை வந்து மேய்ந்து சென்றதும் மறு மந்தை மேய்கிறது

ஒரு மலருக்கு மதிப்பு தருவது அதன் மணம்

ஒரு மழலையின் மொழி அதன் தாயுள்ளத்துக்கே புரியும்

ஒரு மனிதர் செளகர்கயமாக வாழ பல மனிதர் உழைக்கிறார்

ஒரு மனிதன் சீரனிக்க முடியாத அளவுக்கு நம்பக் கூடாது

ஒரு மனிதனால் முடிந்ததை மட்டுமே செய்ய முடியும்

ஒரு மனிதனின் அதிஸ்ட்டம் அவனது குணத்தில் விளைந்த கனிகளே

ஒரு மனிதனின் மௌனமே மற்றவருக்கு இனிமையான மொழி

ஒரு மனிதனுக்கு தெரிந்த புரிந்த மொழியில் பேசினால்தான் தலைக்கு போகும்

ஒரு மனிதனுக்கு பல பெயர் வைத்ததனால் பல பேர் என்ற குழப்பம்

ஒரு மனிதனுக்கு மதிப்பு தருவது அவள் குணம்

ஒரு மனிதனுடைய சுகாதாரமும் நோயும் அவன் தானே எழுதும் கதை

ஒரு மாணவனின் ஒழுக்கக் கேடு ஒரு குடும்பத்தை பாதிக்கும்

ஒரு முட்டாளுக்கும் மறுமுட்டாளுக்கும் இடையே ஞானி பிறக்கிறான்

ஒரு முட்டைக்கும் மறுமுட்டைக்கும் நடுவே தாய் இருக்கிறாள்

ஒரு முறை அகலக்கால் வைத்தவன் திருந்துவது முடியாத கார்யம்

ஒரு ரகசியக் கதவு வழியாக ஒவ்வொருவருக்குள் இறைவன் வருகிறான்

ஒரு வாய்ப்பை பிடித்து கொண்டால் அது பல வாய்ப்புகளாக பல்கி பெருகும்

ஒரு வார்த்தை போதுமான போது இரு வார்த்தை பேசாமலிருப்பது பெரிய திறமை

ஒரு வாழையின் அடியிலே அடுத்த வாழைக்கு குருத்திருக்கு

ஒரு விளக்கினால் ஒராயிரம் விளக்குகளை ஏற்ற முடியும்

ஒரு வீரன் பத்துப்பேரை தன் தீரத்தால் வீரனாக்குவான்

ஒரு வீழ்ச்சியை விட ஒரு சிறிய தொல்வி தப்பில்லை

ஒரு வேசி பத்து கள்ளுகடைக்கடைகாரனுக்கு சமம்

ஒருங்கினைந்த ஒரு கூட்டம் பிரிந்து கிடக்கும் பல கூட்டங்களை ஆள்கிறது

ஒருஙால் தவறினால் உயிர் இழக்கலாம்

ஒருசாண் வயிற்றை வளப்பவர் வயிரை ஊரார் நினைப்பது சுலபம்

ஒருத்தருக்காக படைக்கப்பட்ட பொருத்தமானவர் உலக அதிசயமே

ஒருதனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை

ஒருநூறு வகையான தோசை உள்ள நாட்டை எப்படி ஆள முடியும்

ஒருபிரச்னைக்கு இரு தீர்வுகளை கண்டுபிடிப்பவர் அறிவாளி

ஒருமலர் மலரும் போது ஒரு விருட்சத்தின் விதை கருவாகிறது


ஒரு நட்பு மலரும் போது ஒரு வரலாற்றின் கதை உருவாகிறது

ஒரு நபர் அரசுகளும் ஒரு நபர் முடிவுகளும் ஆபத்தானது

ஒரு நபரின் அந்தரங்கத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தகூடாது

ஒரு நல்ல இதயம் ஓராயிரம் தலைகளுக்கு ஈடாகாது

ஒரு நல்ல காப்பியம் என்பது கால தூர பரிமாணங்களை கடந்தது

ஒரு நல்ல செயல் ஓராயிரம் வார்த்தைகளுக்கு ஈடாகாது

ஒரு நல்ல தலையும் ஒரு நல்ல இருதயமும் சிறந்த ஜோடி

ஒரு நாடு மற்றொன்றுடன் பிணைப்ப்ல்லாமல் வாழ முடியாது

ஒரு நாயின் ஆனந்த அலைச்சல் போல சூதாட்டம் ஒரு பாவமே

ஒரு நாள் த‌ங்க வந்தவனே விருந்தாளி

ஒரு நாளாவது இனிமையாக வாழ்ந்தாலே வாழ்வு முழுமையாகும்

ஒரு நிமிட வெற்றி பல வருட தோல்வியை சரி கட்டி விடும்

ஒரு நிமிடம் தாமதமாவதை விட மூன்று மணி முன்னால் செல்

ஒரு நூறு மரத்தின் விலையை விட ஒரு பொன் முடிக்கே மதிப்பு

ஒரு நூறுமூடரின் கருத்தைவிட ஒரு அறிஞர் முடிவே தெளிவு

ஒரு நொடி அழும் போது மரணம் ஓரடி முன்னேறுகிறது

ஒரு நொடி சிரிக்கும் போது மரணம் ஒரடி பின்னேறுகிறது

ஒரு நொடி கோபம் கூட ஒரு நட்பு முடிச்சை அவிழ்த்து விடும்

ஒரு நொடி துயரம் வெடிபோல மகிழ்வை அழித்து விடும்

ஒரு பங்கு அன்பும் பெரும்பங்கு ஆசையுமுள்ள மனிதனும் மிருகமே

ஒரு பதவி கொடுத்து பார்த்தால் கயவனுடைய சிறுமையை அறியலாம்

ஒரு பழக்கத்தின் முதுகெலும்பு விடாப்பிடியான பிடிவாதமே

ஒரு பழக்கத்துக்கு அடிமையாவது என்பது கண்கட்டி நடப்பது போன்றது

ஒரு பள்ளியின் கதவு திற‌க்கப்படும் போது ஒரு சிறையின் கதவு தேவையில்லை

ஒரு பறவையின் அதிஸ்ட்டம் அதன் உணவான புழுவுக்கு துரதிட்டம்

ஒரு பாதி பூமி பசித்திருக்போது மறுபாதிக்கு நிம்மதியேது

ஒரு புத்தகத்தை விரும்பும் இரு உள்ளங்கள் சிறந்த நண்பர்களாவார்கள்

ஒரு புத்தகம் மட்டுமே தனியொரு புரட்சியாளனாக மாறமுடியும்

ஒரு புதிய அடி எடுக்க ஒரு புதிய சொல் சொல்ல மன வலிமை வேண்டும்

ஒரு பெண்ணின் காம வாழ்வு மனோதத்துவத்தின் இருண்ட கண்டம்

ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டும் என்பதை யாராலும் அறிய முடிவதில்லை

ஒரு பெண்ணுக்கு ஒரு மனிதனை முட்டாளாக்க இருபது நொடி போதும்

ஒரு பெண்ணை மணந்தவன் முழு மனிதனாவான்

ஒரு பெண்ணை விரும்பும இரு நன்பர்கள் விரைவில் பகைவராவார்கள்

ஒரு பேரழிவை விட ஒரு நிமிட தாமதம் தவறில்லை

ஒரு பொய் என்பது கண்ணியத்தை கலைத்து விடும்.

ஒரு பொய்யினால் மனிதன் தனது மனிதத்தின் கண்ணியத்தை இழக்கிறான்

ஒரு பொருளின் அருமையை அதை இழந்த பிறகுதான் உணர முடியும்

ஒரு போதும் ஒரு குற்றத்தை இன்னொரு குற்றம் சரி செய்து விடாது

ஒரு போரின் முடிவிலே அடுத்த போருக்கு கருத்திருக்கு

ஒரு போரை வெல்ல பலமுறை சண்டை போட வேண்டியிருக்கும்

ஒரு சங்கிலியின் தனி வளைய பலகீனம் கட்டையே தளர்த்தும்

ஒரு சத்யவானின் குரல் ஆன்மாவின் குரலுக்கு சமம்

ஒரு சமுதாயத்தின் தனி மனித துரோகமும் நாட்டையே சிதைக்கும்

ஒரு சில நொடி மனித குலத்தையே தூக்கிலிட தோன்றுகிற அளவுக்கு வெறுப்பாகிரது

ஒரு சிறிய அநியாயம் என்ற பொறி பெறிய புரட்சி புயலாகிறது

ஒரு சிறிய அநீதி என்ற விதை பெரிய அக்கிரம ஆலமரமாகிறது

ஒரு சிறு ஆத்திரமான வினாடி பல பெரிய திட்டங்களை சீரழிக்கும்

ஒரு சிறு களங்கம் பெரிய பெருமைகளையும் அழித்து விடும்

ஒரு செயல் முழுமையாக முடிக்கப்பட விரும்பினால் அதை நீயே செய்

ஒரு செயலை செய்தபின் சிந்திப்பவர்க்கு வெற்றியில்லை

ஒரு செயலை செய்து விடுவதால் சில துயரம் வரும்

ஒரு செயலை செய்யாமல் விடுவதால் பெருந்துயரம் வரும்

ஒரு செயலை முடிக்கும் போது அனுபவமும் கூட கிடைக்கிறது

ஒரு சொல்லை சொல்லிய பின் சிந்திப்பவர்க்கு நன்பரில்லை

ஒரு தனி மனித வாழ்வின் ஊடே யாகும் குறுக்கிடக் கூடாது

ஒரு தீமை நடுவிலும் மறு நன்மை வைப்பான்

ஒரு தீர்வின் மீது நம்பிக்கை வைப்பதே அது நல்ல தீர்வு தர வழியாகும்.

ஒரு தீர்வுக்கு இரு பிரச்சனைகளை கண்டுபிடிப்பவர் அரசியல்வாதி

ஒரு தீவிரவாத மூடன் குண்டால் ஒரு நகர வாழ்வு சிதையும்

ஒரு துளி உதிரம் போகப்போக உன் உயிரும் போகிறது

ஒரு துளி நேரம் வீணாகப் போக உன் உதிரம் உதிர்கிறதுஒரு துளி கயமை பல நூறு வாய்மைகளை சிதைக்க வல்லது

ஒரு துளி நீரை வைத்து கடலை அனுமானிப்பவரே தத்துவவாதி

ஒரு சிறு விதை இலை கிளை மலராவதும் அவன் விந்தையாலேஒரு துளி விந்து கண் காது மூக்காவதும் அவன் சிந்தையாலே

ஒரு தேசத்தின் கலாசாரம் அதன் மக்களின் இதயத்துடன் பிணைந்துள்ளது

ஒரு தேசத்தின் நாகரீகம் அது விலங்குகளிடம் காட்டும் நடத்தையை பொறுத்தது


ஒரு அலையின் பின்னே பெரும் சமுத்திரமே இருக்கிறது

ஒரு ஆசிரியரின் ஒழுக்கக் கேடு ஒரு சமூகத்தையே பாதிக்கும்

ஒரு ஆணி இன்னொரு ஆணியை அடித்து வெளியேற்றும்

ஒரு இடத்திற்கு பிறகு நமக்கு எப்போதும் தோல்வியில்லை

ஒரு இருதயத்தின் மொழி இன்னொரு இருதயத்துக்கே கேட்கும்

ஒரு இலக்கை அடைந்த பின் அளந்தால் சிறிதாகத் தோன்றும்

ஒரு இலக்கை அடையும் முன் அளந்தால் பெரிதாக தோன்றும்

ஒரு இளஞனை பராமரிப்பதற்கு எல்லையற்ற பொறுமை வேண்டும்

ஒரு இறைவனுக்கு பல பெயர் வைத்ததனால் பல மதம் என்ற குழப்பம்

ஒரு இனத்துக்கு ஒழுக்கமிருந்தால்தான் அது சுதந்திரமாக வாழத்தகுதியுடையது

ஒரு இன்பம் தன் முதுகில் ஒரு துன்பத்தை கொண்டு வரும்

ஒரு இனம் அதிகம் உழைக்க ஒரு இனம் அதிகம் ஓய்வெடுக்கிறது

ஒரு உண்மை நண்பன் ஓர் ஆயிரம் உறவினருக்கு சம்ம

ஒரு உதவி செய்து பார்த்தால் அறிஞனுடைய அருமையை அறியலாம்

ஒரு உபத்ரவதிற்கு பதிலாக இன்னொரு உபத்திரவம் வருவது முன்னேற்றமாகாது

ஒரு ஒட்டை என்பது கப்பலையே கவிழ்த்து விடும்

ஒரு கட்டத்தில் நாம் வெறும் உழைப்பதை தாண்டி உன்னத லட்சியம் அடைவோம்

ஒரு கண்ணில் கணக்கும் மறுகண்ணில் காதலும் வளர்க்கிறார்

ஒரு கண்ணுக்கு நெய் மறுகண்ணுக்குமை

ஒரு கதவை அடைத்தால் மறு கதவை திறப்பான் கடவுள்

ஒரு காசு இல்லாதவன் உடல் தூக்க நாலு பேரில்ல நாட்டிலே

ஒரு காலடி பாதையாகாது ஒரு தனி சிந்தனை புரட்சியாகாது

ஒரு குரும்புகார சிறுவன் கல்லால் ஒரு தேன் கூடு சிதறும்

ஒரு குழந்தை யின் எதிர்காலம் அதன் தாயின் கையில் இருக்கிறது

ஒரு குழந்தையின் உள்ளம் எவ்வளவு மிருதுவானது

ஒரு கையில் இறைவனை பற்றிக்கொண்டு மறு கையில் கடமையாற்று

ஒரு கொடிய மனிதனின் ஒரு கோடி ஊழலுக்கு நிகராக‌து

ஒரு கொடுங்கோலன் ஒரு கோடி கசாப்புக்கடைக்காரனுக்கு சமம்

ஒரு கொடுங்கோலனுடைய பலம் அவனது மக்களின் அச்சமும் பயமும்

ஒரு கோழை நூறு பேரை தன் வார்த்தையால் கோழையாக்குவான்
Post Reply

Return to “படுகை ஓரம்”