வியந்து தான் போவீர்கள்.....

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

வியந்து தான் போவீர்கள்.....

Post by cm nair » Fri Nov 29, 2013 8:56 am

நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக
்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.
vsjagan
Posts: 15
Joined: Sat Feb 22, 2014 2:55 pm
Cash on hand: Locked

Re: வியந்து தான் போவீர்கள்.....

Post by vsjagan » Sun Feb 23, 2014 9:26 am

பயனுள்ள தகவல் :great:
Post Reply

Return to “படுகை ஓரம்”