கொரிய இளவரசி தமிழச்சி :

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

கொரிய இளவரசி தமிழச்சி :

Post by cm nair » Fri Nov 22, 2013 9:37 am

கி.மு 48ஆம் காலகட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 16 வயதான பேரழகி தன் கனவில் கண்ட இளவரசனை காதலித்து அவரை திருமணம் செய்துகொள்ள எண்ணினாள். அவளின் ஆசை படி அந்த பெண்ணை அவள் பெற்றோர்கள் மரக்கலத்தில் ஏற்றி கொரியா அனுப்பிவைக்க அவள் கொரியாவையும் அந்நாட்டு மன்னரையும் அடைந்தாள்.

இளவரசியின் சொந்த ஊர் 'ஆயுத்த' அல்லது 'ஆயித்த' என்றும் சொல்கிறார்கள். அந்த பெயர் அயோத்தி என்ற பெயரை ஒத்து இருப்பதால் ஆயித்தி தான் அவரின் பூர்வீகம் என்றும் கருதப்படுகிறது.

அந்த இளவரசியில் பெயர் ஹியோ ஹவாங் ஒக்கே.

ஹியோ ஹவாங் ஒக்கே இளவரசி ஒரு தமிழ் பெண் என்றவுடம் அதை நம்ப மனம் மறுத்தது. பின்பு மெல்ல மெல்ல நம்பத்தொடங்கினேன் அவர்களில் கலாச்சாரத்தையும் அவர்கள் மொழியையும் பார்த்து.
தமிழகளை போல கொரிய நாட்டினரும் தங்கள் பெற்றோர்களை அம்மா, அப்பா என்று தான் அழைக்கிறார்களாம்.

'புதியது' என்பதை 'புது' என்கிறார்களாம்.

'நீ திரும்ப வா' என்பதை 'நீ இங்கே பா' என்கிறார்களாம்.

'உயரம்' என்பதை 'உரம்' என்கிறார்கள்.

நாம் சொல்லும் அச்சச்சோ! அப்பாடா.. வெல்லாம் அங்கே சகஜமாம்.

அவர்களது உணவு முறையும் தமிழர்களை போல் அரிசி சாதம் தான். ஊறுகாய் இல்லாது உணவே கிடையாது.

இன்று தான் சீன உணவின் தாக்கம் அங்கு ஏற்பட்டுள்ளதாம்.

தமிழர்கள் அமைக்கும் குடிசைகள் போல தான் கொரிய நாட்டினரும் குடிசைகள் அமைப்பார்கலாம்.

தமிழ் இளவரசியின் சமாதி அங்கு இன்னமும் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா தளமாக உள்ளது.

அதே சமயம் நம் நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களின் சமாதிகள் எங்கு போனதென்றே நமக்கு தெரியாது.

தமிழனாக பிறந்ததற்கு பெருமை படு, பல சாதனைகள் செய்த தமிழர்களை மறந்துவிடாதே!
Post Reply

Return to “படுகை ஓரம்”